மெட்ரோ நிறுவனத்தில் வேலை; தேர்வு இல்லை.. ஆனால் மாதம் ரூ.62,000 சம்பளம்!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு குறித்து தெரிந்துக் கொள்வோம்.
மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உள்ளமைப்பு பணியாளர்களில் 21% பெண்களும், வெளி ஒப்பந்தத் பணியாளர்களில் 50% பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.
இதில் திருநங்கைகளும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் முழுமையாக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களை நிறுவும் பணி தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. இப்பணியிடத்திற்கு வயது வரம்பு அதிகப்படியாக 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப தகுதி
இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 2 வருடங்கள் வரை மாற்றத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரை, தளர்வு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சிவில் பாடப்பிரிவில் B. E / B. Tech முடித்திருக்க வேண்டும். 2 வருடங்கள் அனுபவம் தேவை.
உதவி மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.62,000 தொகுப்பூதியமாக அளிக்கப்படும். விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் இதர செலவினங்கள் வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இரண்டு கட்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நேர்காணல், பின் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.02.2025