ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது.. பயணிகள் என்ன செய்ய வேண்டும் - முக்கிய அப்டேட்!
வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது என தகவல் வெளியாகி உள்ளது.
மெட்ரோ கார்டு
சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கு ஸ்மார்ட் கார்டை அன்றாடம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் விதமாக இந்த மூன்று போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே பயணச்சீட்டை கொண்டு பயன்படுத்தும் முறையைக் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
அதன்படி, மெட்ரோ ரயிலில் "சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் எளிதில் பயணிக்க முடியும். முதல் கட்டமாக 50,000 ஸ்மார்ட் கார்ட் ஸ்டேட் பேங்க் மூலம் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அதற்கு பதிலாக, புதியதாக சிங்கார சென்னை கார்டு புழக்கத்துக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செல்லாது
மேலும் மெட்ரோ கார்டுகள் ஏப்ரலுக்கு பிறகு செல்லாது என்பதால் அதில் உள்ள பாக்கித் தொகை முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிங்கார சென்னை கார்டை பயன்படுத்தி நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம்.
ரயில் நிலைய முன்பதிவு கவுன்ட்டர்களில் இந்த கார்டு இலவசமாகக் கிடைக்கிறது. பழைய கார்டை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைத்து, அந்த கார்டின் வைப்புத் தொகை ரூ.50ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.