அவரை காதலிக்கும் சென்னை மேயர் பிரியா ராஜன் - யார் தெரியுமா?

IBC Tamil Priya Rajan Greater Chennai Corporation
By Thahir Aug 04, 2023 06:54 AM GMT
Report

சென்னை மேயர் பிரியா ராஜன் ஐபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு அரங்கு திறப்பு விழா

ஐபிசி தமிழின் புதிய படப்பிடிப்பு அரங்கு (ஸ்டூடியோ) திறப்பு விழா சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஐபிசி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் புதிய படப்பிடிப்பு அரங்கை (ஸ்டூடியோ) திறந்து வைத்தார்.

Chennai Mayor Priya Rajan who loves him

பின்னர் ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு புன்னகையுடன் தான் சந்தித்து வரும் சவால்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரியா மீது நம்பிக்கை வைத்த முதலமைச்சர் 

அதில், தனக்கு தேவையான ஆடைகளை கணவர் தேர்ந்தெடுப்பார் என்றும் பல்வேறு சூழலில் என்னுடன் இருப்பது என்னுடைய கணவர் தான்.

தான் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியே செல்வதாக இருந்தால் இரவு நேரத்தில் தான் உணவகம் உள்ளிட்டவற்றிக்கு செல்வோம் என்றார்.

மேலும் பேசிய அவர், முதலமைச்சர் இளைஞர்களை ஆதரிப்பதாகவும், அவர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசியல் சார்ந்த அறிவுரைகளை தனக்கு அமைச்சர் சேகர் பாபு கொடுப்பார் என்றும் தெரிவித்தார். தன்னை எல்லோரும் புதியவர் இவரை மேயர் பதிவிக்கு கொண்டு வருவது குறித்து தெரிவத்த போது முதலமைச்சர் இல்லை இந்த பொண்ணு பண்ணுவா..என்று தன் மீது நம்பிக்கை வைத்து மேயர் பதவி வழங்கியதாக தெரிவித்தார். எனவே முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவரை காதலிக்கும் பிரியா

நான் எனது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Chennai Mayor Priya Rajan who loves him

தன்னுடைய மகளை அவர் மிகவும் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற போது ஆரம்ப கட்டத்தில் தனது மகள் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால் தற்போது செய்திகளில் வருவது, முதலமைச்சருடன் இருப்பது போன்றவற்றை பார்த்து அம்மா வேலையில் பிசியாக இருக்கிறார் என்று புரிந்து கொள்கிறார். பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்...