கூச்சமே இல்லாமல் பொறாமையில் புலம்பித் தவிக்கிறார் எடப்பாடி - மேயர் பிரியா கடும் விமர்சனம்!

M K Stalin Tamil nadu Chennai Edappadi K. Palaniswami Priya Rajan
By Swetha Jul 20, 2024 09:00 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைக்கு சென்னை மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

புலம்புகிறார் எடப்பாடி

சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள உணவின் தரம், சுவை மற்றும் அழகு குறித்து ஆய்வு செய்தார்.

கூச்சமே இல்லாமல் பொறாமையில் புலம்பித் தவிக்கிறார் எடப்பாடி - மேயர் பிரியா கடும் விமர்சனம்! | Chennai Mayor Priya Condemns Eps Statement On Cm

இந்த நிலையில் அம்மா உணவகத்தில் தமிழக முதலமைச்சர் திடீர் ஆய்வு பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு தமிழகத்தில் பலர் சுற்றி திரிகின்றனர் - இபிஎஸ் சாடல்!

கொலை செய்வதையே தொழிலாகக் கொண்டு தமிழகத்தில் பலர் சுற்றி திரிகின்றனர் - இபிஎஸ் சாடல்!

மேயர் பிரியா 

அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மேயர் பிரியா கூறியிருப்பதாவது, "தமிழகத்தில் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனம் இல்லை.

கூச்சமே இல்லாமல் பொறாமையில் புலம்பித் தவிக்கிறார் எடப்பாடி - மேயர் பிரியா கடும் விமர்சனம்! | Chennai Mayor Priya Condemns Eps Statement On Cm

கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனி பெருந்தலைவராக மக்கள் நலன் ஒன்றிய மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார். அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லோ சிறுமதியோ ஒருநாளும் இருந்ததில்லை.

திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவார்கள். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பி தவிக்கிறார்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.