இது பிளீச்சிங் பவுடர் இல்லாம..என்ன பாண்ட்ஸ் பவுடரா? கொந்தளித்த மேயர் பிரியா
பிளீச்சிங் பவுடர் குறித்த குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.
பிளீச்சிங் பவுடர் குற்றச்சாட்டு
சென்னை புளியந்தோப்பில் மேயர் பிரியா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு தூவப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து இது குறித்து செய்தியாளர் ஒருவர் மேயர் பிரியாவிடம் அந்த பவுடரை காண்பித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், ‘இதில் பிளீச்சிங் பவுடர் வாசனைதான் வருகிறது. இது பிளீச்சிங் பவுடர்தானே?
மேயர் பதில்
அப்புறம் இது என்ன பான்ஸ் பவுடரா? நீங்கள் என்னுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். சரியான விதத்தில் என்னிடம் பேசுங்கள்’ என்றார். மேலும் பேசிய அவர்,
தமிழக அரசு சார்ப்பில் கொள்முதல் செய்யப்படும் பிளீச்சிங் பவுடரை தான் சென்னை மாநகராட்சி பகுதிகளில் பயன்படுத்துகிறோம். இதில் சுண்ணாம்பு பவுடர் கலக்கப்பட்டதா என விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.