மாணவிகளுக்கு இனி இலவச சானிட்டரி நாப்கின் - மாநகராட்சி அதிரடி!

Chennai
By Sumathi Dec 15, 2022 09:38 AM GMT
Report

8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது.

இலவச நாப்கின் 

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையில் நிர்பயா நிதியின் கீழ் ரூ.4.67 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்று செயல்பட உள்ளது.

மாணவிகளுக்கு இனி இலவச சானிட்டரி நாப்கின் - மாநகராட்சி அதிரடி! | Chennai Mayor Free Sanitary Napkins Scheme

சென்னைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அதன்படி, 25,474 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட உள்ளது.

திட்டம் தொடக்கம்

இத்திட்டமானது எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் செயல்படுத்தப்படும்.

ஒரு மாதத்திற்கு 10 சானிட்டரி நாப்கின்கள் என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 20 சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். மேலும், பள்ளிகளில் அவசரத் தேவைகளுக்காக கூடுதலாக

ஒவ்வொரு மாதமும் 50 சானிட்டரி நாப்கின்கள் என்ற முறையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 100 சானிட்டரி நாப்கின்கள் தனி அலமாரிகளில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.