மசாஜ் செண்டர்களில் சிக்கிய துணை நடிகைகளின் வீடியோக்கள் - தீவிர ரகசிய விசாரணை!
மசாஜ் சென்டர்களில் பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
மசாஜ் சென்டர்
கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் அங்கிருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றியுள்ளனர். வீடியோக்களை ஆய்வு செய்த போலீஸார், பல சினிமா துணை நடிகைகள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் போன்றோர் வீடியோவில் இடம்பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மசாஜ் சென்டர்களில் வரும் இளைஞர்களுக்கு எண்ணை தேய்த்து விட்டு மசாஜ் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இளைஞர்களை மசாஜ் செய்ய அழைத்து குறுஞ்செய்திகளை வாட்ஸ் அப் வழியாக அனுப்பி கவர்ந்துள்ளனர்.
செல்போனில் தினுசாக பேசி மசாஜுக்கு அழைத்த இளம்பெண்கள்.. மயக்கத்தில் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடுமை!
பாலியல் சம்பவங்கள்
தற்போது கோடை வெயில் துவங்கி விட்ட நிலையில் தயிர் மசாஜ், பழ மசாஜ் என்ற பெயர்களில் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறு செய்து இளைஞர்களிடம் பணத்தை பறித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களிலும் தீவிர விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.