சென்னை தாம்பரம் சாலையில்...காரில் சட்டக்கல்லூரி மாணவர் செய்த செயல்!! ஆக்ஷன் எடுத்த காவல்துறை
காரில்
சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை என்பது எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் இடமாகும். இந்த சாலையில் வாகனங்களை இயங்குவது என்பதே பலரும் சிரமமான காரியமாக இருக்கும்.
இவ்வாறான சூழலில் தான், சட்ட கல்லூரி மாணவர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சென்னை பல்லாவரம் - தாம்பரம் ரெடியால் ரோட்டில் கருப்பு நிற காரில் பயணம் செய்துள்ளார் சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவர். 23 வயதாகும் அவர், பயணம் மேற்கொண்டதில் எந்த வித தவறும் இல்லை.
செய்த செயல்
ஆனால், அவர் பயணம் மேற்கொள்ளும் போது திறந்தவெளி காரில், தனது பெண் தோழி ஒருவருடன் காரின் மேற்குறை வழியாக வெளியே நின்றுள்ளார். அதுவும் இல்லாமல், அவர் அப்போது மதுவும் அருந்தியபடி சென்றுள்ளார். கையில் பீர் பாட்டிலுடன் அவர்கள் வளம் வந்தது, இணையத்தில் வைரலாகியுள்ளது.
நிலச்சரிவு வரும்..அனைத்தையும் மூழ்கடிக்கும் - ஒரு வருடத்திற்கு முன்பே எழுதிய சூரல்மலா 8-ஆம் வகுப்பு மாணவி
இச்சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சஞ்சயை கைது செய்துள்ளார்கள். அவர் மீது சட்டப் பிரிவுகள் 281, 355 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தனியார் சட்டக்கல்லூரியில் 5-ஆம் ஆண்டு மாணவரான சஞ்சய், கைது செய்யப்பட்டது மட்டுமின்றி அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.