வந்தாச்சு.. வந்தே பாரத் மெட்ரோ ரயில் - எங்க தெரியுமா?
சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அரக்கோணத்திற்கும் வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை - காட்பாடி
சென்னை - காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ’ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அரை அதிவேக வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் சென்னையில் வந்தே பாரத் மெட்ரோ ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான சென்னை ஐசிஎஃப் ஆலையில் 12 பெட்டிகள் கொண்ட வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்தனர்.
வந்தே பாரத் மெட்ரோ ரயில்
அதன்படி இன்று சென்னை - காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ’ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த சோதனை ரயிலில் 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது. சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பெட்டியில் 104 பேர் அமர்ந்தும், 200 பேர் நின்று கொண்டும் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ வேகம் வரை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விரைவில் சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அரக்கோணத்திற்கும் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து 180 நகரங்களை இணைக்கும் வகையிலான வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.