அதீத ஒர்க் பிரஷர்..உடம்பு முழுக்க மின்சார ஒயர் - ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!
அதீத வேலை காரணமாக ஏற்பட்ட மன அழுத்ததால் ஐடி ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி ஊழியர்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கு வயது 38 . திருமணமாகி மனைவி ஜெயராணி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக 15 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
கடந்த இரண்டு மாதங்களாகவே அதீத வேலை காரணமாக்க அவர் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அவரது மனைவி ஜெயராணி குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவில் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயன் மட்டும் வீட்டிலிருந்துள்ளார்.
தற்கொலை
இந்த நிலையில் கோயிலில் சுவாமி தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு வியாழக்கிழமை இரவு ஜெயராணி வீட்டிற்கு வந்தவுடன் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியை வைத்துக் கொண்டு உள்ளே கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அவரது அறைக்குச் சென்று பார்த்த போது உடம்பு முழுவதும் மின்சார ஒயர் சுற்றப்பட்ட நிலையில், கார்திகேயன் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை கார்த்திகேயனின் உடலைக் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.