டிக்கெட் விற்பனை ....!! CSK கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Chennai Super Kings Chennai IPL 2024
By Karthick Mar 12, 2024 04:42 AM GMT
Report

சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறும் போட்டிகளின் டிக்கெட்டை வாங்குவதை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மைதானம்

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் வரும் 22- ஆம் தேதி துவங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

chennai-ipl-tickets-will-only-be-sold-via-online

இந்த போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் முதல் போட்டி, வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

முதலில் கான்வே இப்போ இந்த பௌலரும் காயம்..? சிக்கலில் CSK - தல'யின் Plan B என்ன..?

முதலில் கான்வே இப்போ இந்த பௌலரும் காயம்..? சிக்கலில் CSK - தல'யின் Plan B என்ன..?

சென்னை அணியின் கேப்டன் தோனி'யின் ஆட்டத்தை காண பல ரசிகர்கள் டிக்கெட் வாங்க பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதன் காரணமாக, கடந்த ஆண்டு நேரடியாக கவுண்டரில் டிக்கெட் வாங்கியவர்கள் பல ஆயிரங்கள் அதிகமாக வைத்து டிக்கெட்டுகளை விநோயோகித்தனர்.

chennai-ipl-tickets-will-only-be-sold-via-online

அது கடும் எதிர்ப்புகளை சந்தித்த நிலையில், தற்போது இந்த ஆண்டிற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்றும், நேரடி டிக்கெட் விற்பனை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.