சனாதன விவகாரம்..அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்...உதயநிதிக்கு சிக்கலா..?
அமைச்சர் உதயநிதி சனாதன பேச்சின் ஆதாரங்களை சமர்ப்பிக்கும் படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதி பேச்சு
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் வலியுறுத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான், கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதால் எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமைச்சர் உதயநிதி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது என்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
மேலும், ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி வாதிட்ட நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு, ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.