அப்படி மட்டும் நடந்தால் படத்தில் நடிக்கவே முடியாது - விஷாலுக்கு நீதிபதி வார்னிங்!
மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால்
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் படங்களை தயாரிக்க கடன் வாங்கியுள்ளார்.
நீதிபதி எச்சரிக்கை
அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை லைகா புரொடக்சன் நிறுவனம் ஏற்று செலுத்தியது. இந்தக் கடனை நடிகர் விஷால் செலுத்தவில்லை என லைகா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,
மார்க் ஆண்டனி படத்தை வெளியிட ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கியும், நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வழக்கு விசாரணை செப்.19க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.