திடீர் உடல்நல கோளாறு - சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மருத்துவமனையில் அனுமதி!!
சென்னை முன்னாள் மேயரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான சைதை துரைசாமி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மேயர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிய போது அவருடன் அதிமுகவில் இணைந்தார்.
1984 சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கான இலவச பயிற்சி மையத்தை நடத்தினார்.
2011 உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று சென்னையின் முதல் அதிமுக மேயர் என்ற பெருமையை பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த கார் வைப்பதில் பலியானார்.
இச்சம்பவம் அவரை மிகவும் பாதிப்படைய வைத்தது. இந்தநிலையில் திடீர்ன்னு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக இன்று காலை சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.