நிவாரண பொருட்கள் வழங்கி சிக்கிய நயன்தாரா - வெடித்த சர்ச்சைக்கு காரணம் இதுதான்!

Nayanthara Chennai
By Sumathi Dec 07, 2023 11:19 AM GMT
Report

நடிகை நயன்தாரா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நயன்தாரா

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வெள்ளம் சென்னையை ஆட்டிப் படைத்தது. இதனால் பல இடங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. பாதிப்படைந்த மக்களும் மீண்ட பாடில்லை.

nayanthara femi 9

இதனைத் தொடர்ந்து, நிவாரண உதவிகளை அரசு செய்து வருகிறது. மேலும், தன்னார்வலர்கள், சினிமா பிரபலங்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், சின்னத்திரை நட்சத்திரங்கள் பாலா, அறந்தாங்கி நிஷா, இயக்குநர் பார்த்திபன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.

தமிழக அரசு கேட்டது ரூ.5,060 கோடி - மத்திய அரசு ரூ.450 கோடி அறிவிப்பு!

தமிழக அரசு கேட்டது ரூ.5,060 கோடி - மத்திய அரசு ரூ.450 கோடி அறிவிப்பு!

 நிவாரண உதவி

இந்நிலையில், நடிகை நயன்தாராவும் தனது 'பெமி 9' (Femi 9) நிறுவனத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதுகுறித்த வீடியோவை 'பெமி 9' நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில் பெண்கள் சிலர் நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இக்கட்டான சூழ்நிலையில் கூட நிறுவனத்திற்கு விளம்பரம் தேவையா? என விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் உதவும் மனப்பான்மைக்காக சிலர் பாராட்டியும் வருகின்றனர்.