ECR பீச்சில் தனிமையில் இருந்த காதல் ஜோடி - சுற்றிவளைத்த 5 பேர்!! அடுத்து நிகழ்ந்த அதிர்ச்சி ??
சென்னை ECR பீச்சீல் இருந்த காதலர்ளிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீச்
பெரிய சுற்றுலாத்தலமான பீச், தினமும் பல தரப்பு மக்களை ஈர்த்து வருகின்றது. காலை வாக்கிங் போவதில் துவங்கி, இரவு நிலவை வேடிக்கை பார்ப்பது என பலரும் அடிக்கடி பீச்சிற்கு விசிட் அடித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில், பீச் என்பது காதலர்களின் ஒரு சந்திப்பு இடமாகவே உள்ளது. பல காதலர்கள் பீச்சில் சந்திப்பதையே வழக்கமாக கொண்டுளள்னர். அதன் காரணமாக பல வணிகமும் அது தொடர்பாக கடற்கரைகளில் அதிகரித்துள்ளன.
ஜோசியம் பார்ப்பவர்களில் துவங்கி, பல சாப்பாட்டு பொருட்களும் இது போன்ற ஜோடிகளை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. அதே போல சமூகவிரோதிகளும் இது போன்ற காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேளையிலும் ஈடுபடுகிறார்கள்.
கைது
சென்னை ECR பீச்சில் இது போன்று காதலர்களை குறிவைத்து 5 பேர் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த 5 பேர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவர்கள் கூட்டாக திருவிடந்தை கடற்கரை பகுதியில் காதல் ஜோடிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை, செல்போன் பறிக்க திட்டம் தீட்டியிருந்ததும் தெரிய கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை வைத்து அதிரடியாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட போலீசார் 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்த கத்தியும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.