மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெண்ணை முட்டி தரதரவென இழுத்து சென்ற எருமை மாடு!!
சென்னை திருவெற்றியூரில் மாடு பெண் ஒருவரை முட்டி இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடு பிரச்சனை
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கால்நடைகளின் பிரச்சனை அதிகமாகியுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்காளாக மாடுகளின் பிரச்சனை பெரும் தொல்லையாகவுள்ளது.
பெருநகராட்சியான சென்னையில் மாடுகள் ஆங்காங்கே குழந்தைகளையும், பெண்களையும் முட்டி துரத்துவது என பல சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றது.
பள்ளி சிறுமியை ஆக்ரோஷமாக முட்டித்துாக்கி கீழே போட்டு கடுமையாக தாக்கிய பசு மாடு - தாய் கண் முன்னே நடந்த கொடூரம்..!
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் பல அறிவுறுத்தல்களை இது தொடர்பாக வெளியிட்டுள்ளார். கடுமையான நடவடிக்கைகள் கால்நடைகளின் உரிமையாளர் மீது எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கைகளும் விடுத்தனர்.
மீண்டும் மீண்டும்
இந்நிலையில் தான், இன்று மீண்டும் அதிர்ச்சி தரும் வகையில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பரபரப்பான சித்வ் காட்சி ஒன்றும் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
சென்னை திருவெற்றியூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எருமை மாடு ஒன்று முட்டியது மட்டுமின்றி, அப்பெண்ணை தரதரவென இழுத்து சென்றுள்ளது. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முட்டி தூக்கிய மாட்டின் உரிமையாளர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.