பள்ளி சிறுமியை ஆக்ரோஷமாக முட்டித்துாக்கி கீழே போட்டு கடுமையாக தாக்கிய பசு மாடு - தாய் கண் முன்னே நடந்த கொடூரம்..!
சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து தனது தாயுடன் வீடு திரும்பிய கொண்டிருந்த சிறுமியை பசு மாடு ஆக்ரோஷமாக முட்டித்துாக்கி கீழே போட்டு கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி சிறுமியை கொடூரமாக தாக்கிய பசு மாடு
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் பள்ளி முடிந்து தாயுடன் சிறுமி வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
வீதியில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பசு மாடு திடீரென அந்த பள்ளி சிறுமியை கொம்பால் முட்டித்துாக்கி வீசியது.
பின்னர் அந்த சிறுமியை கீழே வீசி தனது கொம்பால் விடாமல் தாக்கியது. தாய் கற்களை வீசி விரட்ட முயன்றார். மேலும் பள்ளி சிறுமி மற்றும் தாய் கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் மாட்டை விரட்ட முயன்றனர்.
அப்போது மாடு அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடுமையாக சிறுமியை தாக்குவதை நிறுத்தவில்லை. பின்னர் பொதுமக்கள் கடும் போராட்டாத்திற்கு பின் பள்ளி சிறுமியை மீட்டனர். மாடு தாக்கியதில் காயமடைந்த பள்ளி சிறுமி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
பசு மாடு அடைப்பு
இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாடுகளை தெருவில் அவிழ்த்து விடாமல் தனி இடத்தில் மாட்டு உரிமையாளர்கள் அடைத்து வைக்க வேண்டும் என்றார்.
நடவடிக்கை எடுத்தாலும் கூட ரூ.2000 ஆயிரம் அபராதம் செலுத்தி விட்டு மாட்டை அழைத்துச் செல்வதாக தெரிவித்தார்.
மாடுகள் வளர்போருக்கு போதிய இட வசதி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாடு தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பள்ளி சிறுமியை தாக்கிய பசு மாட்டை நேற்று இரவே பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னை போன்ற நகரங்களில் இது போன்று மாடுகளை அவிழ்த்து விட்டு எனக்கென்று இருக்கும் மாட்டு உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல பாதுகாப்பாளர்கள்.