லிப்ஸ்டிக் பூசியதால் தபேதார் பணி இடமாற்றமா? சென்னை மேயர் அலுவலகம் விளக்கம்

Chennai Greater Chennai Corporation
By Karthikraja Sep 25, 2024 08:00 AM GMT
Report

தபேதார் லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

பெண் தபேதார்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக இருந்தவர் மாதவி(50). இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் ஆவார்.

chennai dafadar madhavi

மேயர் பிரியா அரசு சம்பந்தமாகச் செல்லும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது இவரும் உடன் இருப்பார். எப்போதும் தபேதார் சீருடையில் இருக்கும் மாதவி, தனது உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இனி சென்னைக்கு வெள்ளம் வராது - அரசின் அசத்தல் திட்டம்

இனி சென்னைக்கு வெள்ளம் வராது - அரசின் அசத்தல் திட்டம்

மெமோ

அடர் நிற உதட்டுச் சாயங்களைப் பூசிக் கொண்டு வரக் கூடாது என மாதவி மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் அறிவுறுத்தியதாகவும், அதற்கு மாதவி செவிசாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

chennai corporation

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி மாதவி காலையில் பணிக்கு 30 நிமிடம் தாமதமாக வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்குத் தாமதமாக வந்ததாகவும் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்ற மறுப்பதாகவும் கூறி மாதவிக்கு அன்றே மெமோ அளிக்கப்பட்டது.

இடமாற்றம்

காலில் காயம் இருந்ததாலே தாமதமாக வந்ததாகவும், லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவு ஏதேனும் உள்ளதா? அதுபோன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள் எனவும் மெமோவுக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மாநகராட்சி அவரை மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மேயர் அலுவலகம், மாதவி, லிப்ஸ்டிக் விவ்காரத்தால் இடமாற்றம் செய்யப்படவில்லை. பணியைச் சரியாகச் செய்யாத காரணத்தாலேயே மெமோ கொடுக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்று விளக்கமளித்துள்ளது.