மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - தீவிர நடவடிக்கையில் மாநகராட்சி
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 2022-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில், கடந்த 10 நாள்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமெடுத்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு 4,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்திலும் பாதிப்பு 200-யைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அளவு அதிகரித்துவருகிறது.
நடவடிக்கை
இதனால், சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறது. பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திவருகிறது.
இந்தநிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.