பரவும் கொரோனா தொற்று; தியோட்டர்களுக்கு செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு..!

COVID-19 Government of Tamil Nadu
By Thahir Apr 03, 2023 09:14 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தியேட்டர்களுக்கு சுகாதாரத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று 

கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது கொரோனா தொற்று. இதனால் பல்வேறு உலக நாடுகலும் கடுமையாக பாதிக்கப்பட்டு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது இதனால் மக்கள் வீடுகளில் முடங்கின.

New regulation for spreading corona theaters

இதையடுத்து நாட்டையே கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா நோய் தொற்று குறைந்த நிலையில் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கட்டுப்பாடு விதித்த சுகாதாரத்துறை 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது முககவசம் கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

New regulation for spreading corona theaters

இந்த நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடமான சினிமா தியேட்டர்களில் மக்கள் முககவசம் அணிவது அவசியம் என் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் மிதமாகவே உள்ளதால் அதிரடி கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க வேண்டிய அவசியமில்லை.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிவதை மட்டும் சில இடங்களில் கட்டாயமாக்கி வருகிறோம்.

முதலில் மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது தியேட்டர்கள், ஏசி வசதி உள்ள அரங்குகள், கலையரங்கம் ஆகியவற்றில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.