தமிழ்நாட்டில் உள்ள இந்த நகரம் இரண்டு உலகப்போரிலும் தாக்கப்பட்டதா? அதன் விளைவு என்ன?

Chennai World War II World
By Swetha Mar 25, 2024 07:47 AM GMT
Report

இரண்டு உலக போர்களிலும் தாக்கப்பட்ட ஒரே நகரம் குறித்து காணலாம்

நகரம்

நமது உலகம் இதுவரை இரண்டு உலகப்போர்களை சந்தித்துள்ளது. இந்த போர் உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் மரணத்திற்கும், பொருளாதார பின்னடைவுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், இரண்டு உலகப்போரிலும் இந்தியாவில் தாக்கப்பட்ட ஒரே நகரமாக மெட்ராஸ் இருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நகரம் இரண்டு உலகப்போரிலும் தாக்கப்பட்டதா? அதன் விளைவு என்ன? | Chennai City Was Attacked During Both Ww1 And Ww2

இரண்டு போர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மெட்ராஸ் அதனை எதிர்கொள்ளும் திறனை நன்கு வளர்த்துக் கொண்டிருந்தது.

துப்பாக்கியுடன் திருட வந்த திருடர்கள்; கையால் அடித்தே ஓட விட்ட சிங்க பெண்கள் - viral video!

துப்பாக்கியுடன் திருட வந்த திருடர்கள்; கையால் அடித்தே ஓட விட்ட சிங்க பெண்கள் - viral video!

முதலாம் உலகபோர்

1914 அன்று ஜெர்மன் கப்பலான SMS Emden மெட்ராஸ் கடற்கரைக்கு அருகில் இருந்தது. முதலாம் உலகப் போரின் (1914-18) முதல் நடவடிக்கையாக பிரிட்டிஷாருக்குச் சொந்தமான பர்மா ஆயில் நிறுவனத்தின் சேமிப்புத் தொட்டிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நகரம் இரண்டு உலகப்போரிலும் தாக்கப்பட்டதா? அதன் விளைவு என்ன? | Chennai City Was Attacked During Both Ww1 And Ww2

ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி, ஒட்டோமான் பேரரசு மற்றும் பல்கேரியாவின் மத்திய சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்தியாவின் ஒரே நகரமாக மெட்ராஸ் மாறியது. இது குறித்து சில வரலாற்றாசிரியர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஜெர்மன் போர்க்கப்பலின் முக்கிய இலக்காக இருந்ததாகவும், ஆனால் குறிவைத்தவர்கள் தவறாக குறிவைத்ததில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஆங்கிலேயர்கள் பதில் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, துறைமுகத்திற்குள் இருந்த எண்ணெய் தொட்டிகள் மற்றும் வணிகக் கப்பல்களை முழுவதுமாக அழித்துவிட்டு SMS Emden அங்கிருந்து வெளியேறியது. இதுவே முதல் முறை மெட்ராஸ் தாக்கப்பட்டதாகும்.

இரண்டாம் உலகபோர்

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்களின் விமானத் தாக்குதலை எதிர்கொள்ள மெட்ராஸ் தயார் நிலையில் இருந்தது. வான்வழித் தாக்குதல் முகாம்கள் அமைக்கப்பட்டு, சைரன்கள், தோண்டப்பட்ட அகழிகள் மாற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் அனைவரையும் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நகரம் இரண்டு உலகப்போரிலும் தாக்கப்பட்டதா? அதன் விளைவு என்ன? | Chennai City Was Attacked During Both Ww1 And Ww2

அனால், நள்ளிரவில் ஜப்பானிய விமானம் மெட்ராஸின் மீது நடத்திய குண்டுவீசுத்தாக்குதல் மூன்று நாட்களுக்கு யாருக்கும் தெரியாமல் இருந்தது. வானொலி,செய்தித்தாள்,மின்சாரம் என எதுவும் இல்லாததால் இதுபற்றி மக்களுக்கு தெரியவில்லை.

மேலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே இந்த குண்டுகள் வீசப்பட்டது. அதில், இரண்டு பேர் உயிரிழந்ததாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது. இதுவே இரண்டாவது முறை மெட்ராஸ் உலகப்போரிலும் சர்வதேச நாடுகளின் தாக்குதலுக்கு ஆளானது.

தாக்குதலின் விளைவுகள்

அரசாங்கம் வங்கிகள் மற்றும் முக்கிய நிறுவனங்களை வேறு நகரத்திற்கு மாற்றியது. ஒரு வாரத்தில், அரை மில்லியன் மக்கள் சென்னையை விட்டு வெளியேறினர், இதனால், திருச்சி, கோவை போன்ற சிறிய நகரங்களில் வாடகை உயர்ந்தது.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நகரம் இரண்டு உலகப்போரிலும் தாக்கப்பட்டதா? அதன் விளைவு என்ன? | Chennai City Was Attacked During Both Ww1 And Ww2

மெட்ராஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக எண்ணிக்கையில் குறைந்தது. பூட்டுகளின் தேவை அதிகரித்தது. ஏன்னெனில், பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து திருடர்கள் பூட்டுகளை திருடிச் சென்றனர்.

இதனால் திண்டுக்கல்லில் உள்ள பூட்டுத் தொழிற்சாலையில் மாதம் ஒன்றுக்கு 300 பூட்டுகள் மட்டுமே செய்யப்பட்டன, ஆனால் நகரத்தில் சுமார் 1 லட்சம் வீடுகள் இருந்ததால் தேவை அதிகமாக இருந்தது.

மக்கள் கார்களை பகிர்ந்துகொள்ளும் நிலைமை நிலவியது. கார்-பகிர்வு எனும் கிளப்பில் மக்களுக்கு அழைப்பு விடுத்த ஓரு அறிக்கையில், "நீங்கள் தனியாக சவாரி செய்யும் போது ஹிட்லருடன் சவாரி செய்கிறீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தது.இந்த தாக்குதலுக்குப் பிறகு மெட்ராஸ் இயல்பு நிலைக்கு திரும்ப சில ஆண்டுகள் தேவைப்பட்டது.