இரவு நேரங்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் - எப்போது தெரியுமா?

Chennai
By Vidhya Senthil Aug 25, 2024 01:26 PM GMT
Report

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் இன்று முதல் 27ம் தேதி வரை இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மவுண்ட் பூந்தமல்லி ரோடு - புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை சென்னை மெட்ரோ ரயில் பணியின் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் - எப்போது தெரியுமா? | Chennai City Taffic Police Announcement

அதன்படி, இன்று முதல் (25ம் தேதி) வரும் 27ம் தேதி வரை இரவு நேரங்களில் (இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்களில் எந்த மாற்றமும் இல்லை.

அவை வழக்கம் போல் இயக்கப்படும். போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுன்ட் பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ECR பக்கம் 2 நாள் போகாதீங்க..! அதிரடி போக்குவரத்து மாற்றங்கள்..!

ECR பக்கம் 2 நாள் போகாதீங்க..! அதிரடி போக்குவரத்து மாற்றங்கள்..!

காவல்துறை:

அதற்கு பதிலாக, அவர்கள் புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்புவார்கள் (புஹாரி ஹோட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை - பெல் (BEL) ராணுவ சாலை சந்திப்பில்) டிஃபென்ஸ் காலனி 1வது அவென்யூ (வலதுபுறம்) - கண்டோன்மென்ட் சாலை,

இரவு நேரங்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் - எப்போது தெரியுமா? | Chennai City Taffic Police Announcement

(இடதுபுறம் திருப்பம்) - சுந்தர் நகர் 7வது குறுக்கு - தனகோட்டி ராஜா தெரு - சிட்கோ (SIDCO) இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு கட்ட சாலை - ஒலிம்பியா X 100 அடி சாலை சந்திப்பு வழியாக செல்லலாம். இங்கிருந்து, வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலதுபுறமாகவும், வடபழனியை அடைய இடதுபுறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்லலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.