Farewell for தல - கலர்புல்லாக தயாராகும் சேப்பாக்கம்!!
இன்று தோனியின் கடைசி ஆட்டம் இருக்கக்கூடும் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
தோனி
சச்சினுக்கு பிறகு ஒரு Generation'ஐ கிரிக்கெட் பக்கம் திருப்பிய புகழ் தோனியையே சாரும். உலகக்கோப்பை டி20, உலகக்கோப்பை ஒரு நாள், சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணிக்காக வென்ற அவர், ரசிகர்களின் ஆஸ்தான நாயகனாகவே உள்ளார்.
5 ஐபிஎல் ட்ராபிகளையும் வென்றுள்ள தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2019-ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் தோனி, retirement தான் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் முக்கிய பேசும் பொருளாக இருக்கின்றது.
இந்த ஆண்டு அவர் கேப்டன்ஷிப்பை விட்டு விலகியதே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர், இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.
இன்று சென்னை அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை மைதானத்தில் தான் தன்னுடைய கடைசி ஆட்டத்தை ஆடவேண்டும் என ஆசை கொண்டிருக்கும் தோனிக்காக மைதானம் தயாராகி வருகின்றது.
எதற்கோ தயாராகி கொண்டிருக்கும் சேப்பாக்கம் மைதானம்... ????pic.twitter.com/5UB88Ebkg8
— Devendran Palanisamy (@devpromoth) May 11, 2024