இனி பஸ்ல சில்லறை பிரச்சினை இல்லை; யுபிஐ மட்டும் தான் - அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு பேருந்து
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்யும் வகையில் ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரியுள்ளது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம். அதன்படி முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
பேருந்து கார்டு
வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். வெளிநாடுகளில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது.
அதேபோல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை வாங்க நடத்துனர்களும் ஊக்குவிக்கப்பட உள்ளனர். இதன் பொறுத்து தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.