சென்னை: கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை இன்று முதல் ரத்து - நோட் பண்ணுங்க!

Chennai
By Sumathi Nov 29, 2023 04:06 AM GMT
Report

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை - தாம்பரம்

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (29.11.2023) முதல் டிசம்பர் 14 ஆம் தேதி (14.12.2023) வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மார்க்கத்தில் இயக்கப்படும் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

beach-tambaram-train

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னையில் பரபரப்பு..! பயங்கர சத்தத்துடன் கழன்ற மின்சார ரயில் பெட்டி - அலறிய பயணிகள்

சென்னையில் பரபரப்பு..! பயங்கர சத்தத்துடன் கழன்ற மின்சார ரயில் பெட்டி - அலறிய பயணிகள்

ரயில் சேவை ரத்து 

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (29.11.2023) முதல் டிசம்பர் 14 ஆம் தேதி (14.12.2023) வரை, நள்ளிரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக

chennai

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மார்க்கத்தில் இயக்கப்படும் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.