சென்னையில் பயங்கரம்..! கல்லுாரி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Thahir Sep 27, 2022 12:27 PM GMT
Report

சென்னையில் ஆட்டோவில் சென்ற கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை 

சென்னையில் உள்ள கல்லுாரி ஒன்றில் மாணவி ஜர்னலிசம் படிப்பு படித்து வருகிறார். இவர் தனக்கு நடந்த கொடுமையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரின் பதிவில், கடந்த 25 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சோழிங்கநல்லுாரில் உள்ள ஹோட்டலுக்கு தனது தோழியுடன் ஊபர் ஆப் ஒன்றில் ஆட்டோவை புக் செய்து சென்றுள்ளார்.

ஹோட்டல் வந்த உடன் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆன்லைனில் பணம் செலுத்தி விட்டு இறங்கிய போது தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாகவும் அப்போது அதிர்ச்சியடைந்த நான் சத்தமாக கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தோம்.

அப்போது ஆட்டோ ஒட்டுநர் தப்பிக்க முயன்ற போது நானும் எனது தோழியும் அவரை பிடிக்க முயன்றோம்.ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்.

சென்னையில் பயங்கரம்..! கல்லுாரி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை | College Student Sexually Harassed In Auto

இச்சம்பவம் பற்றி புகார் கொடுக்க போலீசாரை தொடர்பு கொண்டோம் ஆனால் எந்த பதிலும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜயகுமார் ஐபிஎஸ் ஆகியோரை ட்விட்டர் பக்கத்த்தில்டேக் செய்துள்ளார்.

போலீசார் அலைக்கழிப்பு 

பின்னர் புகார் அளித்து அரை மணி நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் மற்றும் ஒருவரும் ஹோட்டலுக்கு விசாரணைக்கு வந்தனர். காலையில் வழக்குப்பதிவு செய்வதாகவும், காத்திருங்கள் எனவும் கூறியதாகவும் அவருடன் மகளிர் போலீசார் யாரும் வரவில்லை என்றும் மாணவி கூறியுள்ளார்.

மேலும் ஹோட்டலுக்கு வந்த போலீசாரிடம் மகளிர் போலீசார் குறித்து கேட்டதற்கு அரசின் உத்தரவுபடி இரவு நேரத்தில் பெண் போலீசாருக்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இரண்டு ஹோட்டல் ஊழியர்களுடன் காவல்நிலையம் சென்ற அவர்களை காவல் நிலையத்திற்குள் அனுமதிக்காத காவல் துறை அதிகாரிகள் காவல் நிலையத்தின் வெளியில் புகார் எழுதி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

பின்பு ஆன்லைனில் FIR-ஐ பதிவுசெய்துள்ளேன்" என கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட அந்த மாணவி டிரைவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.

ஆட்டோ டிரைவர் கைது 

இது மிக கொடுமையானது என்றும், தன்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியேவர முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி,"நான் அவனை பார்த்து கத்தும்போது, அவன் என்னை நோக்கி சிரிக்கும் அளவிற்கு துணிச்சலாக இருந்தான்.அவனது முகத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். அந்த சம்பவம் தாம்பரம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால், புகார் தாம்பரம் காவல் துறைக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவரை தேடி வருவதாகவும் முதல்கட்டமாக, தாம்பரம் போலீசார் ட்விட்டரில் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு ஆட்டோ டிரைவர் பிடிபட்டதாகவும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.