4 நிமிஷம் தான்; பணம் மட்டுமா.. இனி ATMல் பிரியாணியும் - அசத்தல் அறிமுகம்
ஆட்டோமேட்டிக் முறையில் பிரியாணி வழங்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
பாய் வீட்டுக் கல்யாணம்
தமிழர்களுக்கு பாரம்பரிய உணவுகள் பல பிடித்தாலும் பிரியாணி அனைவருக்கும் பிடிக்கும். அதை கொஞ்சம் வித்தியாச முறையில் வழங்கி பிரியாணி பிரியர்களை அசத்தி உள்ளனர் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்த கடை சென்னை, கொளத்தூரில் அமைந்துள்ளது.
பாய் வீட்டுக் கல்யாணம் என்ற உணவகம் ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்த கடையின் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி வாங்கும் வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டார்.
ATMல் பிரியாணி
இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த கடையில்தான் இந்தியாவில் முதல் முறையாக இயந்திரம் மூலம் வழங்கப்படும் பிரியாணியாகவுள்ளது. இங்கு கடைக்குள் சென்றவுடன் டச் திரை மூலம் நமக்குத் தேவையான பிரியாணி வகையைத் தேர்வுசெய்யவேண்டும்.
பின்னர் ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்த வேண்டும். அதன் பின் சில நிமிடங்கள் காத்திருந்தால் நீங்கள் தேர்வு செய்த சுவையான பிரியாணி பேக் செய்யப்பட்ட முறையில் கையில் வழங்கப்படும்.