தி.நகருக்கு வரும் விடிவுக்காலம் - சென்னையில் அமையும் மிக நீண்டமான பாலம்!
சென்னையின் மிக நீளமான பலத்திற்கான கட்டுமான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தி நகர்
சென்னையின் முக்கிய பகுதி தியாகராய நகர். வட மற்றும் தென் சென்னையில் மத்தியில் அமைந்துள்ள மிக முக்கிய வணிக இடமான தி நகரில் பெரும்பாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
அதே நேரத்தில், சென்னை அண்ணா சாலை மிக முக்கியமான சாலையாக உள்ளது. சிஐடி நகர் போன்ற பகுதிகள் இதன் காரணமாக, பெறும் கூட்ட நெரிசலை சந்தித்து, போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும்.
குறிப்பாக அலுவலகம் விடும் நேரத்தில் சுமார் 2 மணி நேரம் அண்ணா சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறது. இந்த சாலையை கடந்து செல்ல வேறுவழி இல்லாத நிலையில், தான் இந்த போக்குவரத்து நெரிசலை உண்டாகிறது.
பெரிய பாலம்
இதனை சரிசெய்ய சென்னையின் தென் மற்றும் வட பகுதிகள் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்று கட்டுமானத்தில் உள்ளது. சென்னை உஸ்மான் சாலையில் அமைந்துள்ள மேம்பாலமும், அண்ணா சாலை இரண்டையும் இணைக்கும் இரும்பு மேம்பாலம் ஒன்று கடந்த ஆண்டே அமைச்சர் உதயநிதி அடிகள் நாட்ட கட்டுமானத்தில் உள்ளது.
இருவழி சாலையாக 55 தூண்களுடன் 7.45 மீட்டர் அகலத்தில் 1.2 கிமீ தூரத்திற்கு இந்த பலமானது அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பலமானது திறக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் சாலைகளில் கணிசமாக குறையும் என்றே நம்பப்படுகிறது.