புத்தாண்டில் வந்த செய்தி -சென்னையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து - எந்த பகுதி தெரியுமா..?

Tamil nadu Chennai Greater Chennai Corporation
By Karthick Jan 01, 2024 07:12 AM GMT
Report

சென்னை புளியந்தோப்பில் மேம்பால கட்டுமானப் பணி நடைபெற உள்ளதால் நாளை(02-01-2024) முதல் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணி

வடசென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றாக புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை அதாவது திருத்தணி ரேணிகுண்டா சாலை உள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலின் காரணமாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

மக்களின் இந்த நியாய கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ள நிலையில், அதன் காரணமாக போக்குவரத்து மாற்றப்படுவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

traffic-change-for-one-year-in-chennai-pulianthope

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.2) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இதன்படி, பெரம்பூா் மற்றும் வியாசா்பாடியிலிருந்து டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக புரசைவாக்கம் வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்ல வேண்டும்.

புரசைவாக்கம், டோவெட்டனில் இருந்து பெரம்பூா், வியாசா்பாடி, மாதவரம் வழியாக டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூா் பிரதான சாலை தெற்கு, முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூா் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக சென்று அவா்களின் இலக்கை அடையலாம்" என போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.