வீட்டு வேலைக்கு வெளிநாட்டுக்கு சென்ற பெண்..நடுவானில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - நடுங்கிய பயணிகள்!
நடுவானில் விமானத்திலிருந்த பெண் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசாத்தி வயது 37. இவர் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கேயே தங்கி ராசாத்தி வேலை பார்த்துக் வந்துள்ளார். இந்த நிலையில் ராசாத்திக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அப்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சொந்த ஊருக்குச் செல்ல ராசாத்தி முடிவு செய்துள்ளார்.இதற்காகத் தான் செய்த வேலையை விட்டுள்ளார். அதன்பிறகு கோலாலம்பூரிலிருந்து விமானம் மூலமாகச் சென்னை திரும்பியுள்ளார்.
இந்த சுழலில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ராசாத்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
மாரடைப்பு
இதனையடுத்து சென்னையில் விமானம் தரையிறங்கியவுடன் ராசாத்தியை பரிசோதித்த மருத்துவக் குழு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்திருந்தாக தெரிவித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாகத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.