மிக்ஜாம் புயலால் சென்னை விமான நிலையம் மூடல் - 150 விமான சேவைகள் ரத்து!
சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் இரவு 11 மணி வரை மூடப்பட்டுள்ளதுடன், 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலையம் மூடல்
மிக்ஜாம் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று இரவு 11 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு பயணிகள், சரக்கு, தனி, ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வகையிலான விமானங்களும் வருவதற்கு அனுமதி இல்லை என்றும், இரவு 11 மணிக்கு மேல் அப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் என்றும் இந்திய விமான அதிகார ஆணையம் (ஏஏஐ) தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னையிலிருந்து விமானங்கள் புறப்பாடானது விமான பைலட்டுகள், அந்தந்த விமான நிறுவனங்கள் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
30 விமானங்கள் திருச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சுமார் 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் சென்னை விமான நிலைய விமான ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியிருக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்பாக பயணிகள் தங்கள் விமான சேவை குறித்து உறுதி செய்துகொள்ளுமாறு, விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
மிக்ஜாம் புயல், மழை காரணமாக சென்னையின் பல்வேறு நகரங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன. சென்னை மாநகரில் மட்டும் 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
मिहॉंग वादळाच्या आगमनानंतर चेन्नई आणि परिसरात जोरदार पाऊस पडत आहे. चेन्नई विमानतळाच्या धावपट्टीवरही पूर आला.#ChennaiRains #chennaiairport #news #CycloneMichaung #latestnews #ViralVideos #navarashtra pic.twitter.com/7oZ0ZAcEjl
— Navarashtra (@navarashtra) December 4, 2023