விமான கட்டணம் அதிரடி உயர்வு - மக்கள் அதிர்ச்சி!

Chennai Flight
By Sumathi 2 மாதங்கள் முன்

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தொடர் விடுமுறை

வரும் அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி, தசரா,ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்ல விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.

விமான கட்டணம் அதிரடி உயர்வு - மக்கள் அதிர்ச்சி! | Chennai Air Travel Fee Hike On October

இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக 4,500 ரூபாய் கட்டணம் தற்போது 6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 கட்டணம் உயர்வு

ஜெய்ப்பூர் செல்லும் விமான கட்டணம் 5 ஆயிரத்திலிருந்து 24 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவிற்குச் செல்ல 15,000 ரூபாயிலிருந்து 22,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் அகமதாபாத்திற்கு 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் வரையும், புனேவுக்கு 9 ஆயிரம் ரூபாய் வரையும்,

மும்பைக்கு 16 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மதுரைக்கு 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில் இருந்து திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.