ரயிலில் திடீர் தீ விபத்து - பெட்டிகளை பிரிக்க.. ரயிலை கைகளால் தள்ளிய பயணிகள் - வைரல் வீடியோ
உத்தரபிரதேசம், மீரட் அருகே உள்ள தௌராலா ரயில் நிலையத்தில், சஹாரன்பூர்-டெல்லி ரயிலின் இன்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகளில் திடீரென்று தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பொதுமக்களே தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து, தீப்பிடித்த இன்ஜின் மட்டும் இரண்டு பெட்டிகளிலிருந்து மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருக்க, மீதமுள்ள பெட்டிகளை பிரிக்கும் முயற்சியில் பயணிகள் இறங்கினர். இதற்காக பயணிகள் அனைவரும் ரயிலை தன் கைகளால் தள்ளியுள்ளனர்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Uttar Pradesh: Fire broke out in engine & two compartments of a Saharanpur-Delhi train, at Daurala railway station near Meerut.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 5, 2022
Passengers push the train in a bid to separate the rest of the compartments from the engine and two compartments on which the fire broke out. pic.twitter.com/Vp2sCcLFsd