இனி கேரளாவுக்கு போக வேண்டாம்; தயாரான மிதவை படகு - அசத்தல் அறிவிப்பு!
சென்னையில் மிதக்கும் உணவகக் கப்பல் தொடங்கப்பட்டுள்ளது.
மிதக்கும் உணவகம்
சென்னை அருகே உள்ள முட்டுக்காடு சுற்றுலா பகுதியாக உள்ளது. இங்கு 5 கோடி ரூபாய் செலவில் மிதவை படகு உணவகம் அமைக்கப்பட இருப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இதற்கான பணியை அப்போதைய அமைச்சர் கே. ராமசந்திரனால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மிதக்கும் உணவகம் தனியார் பங்களிப்புடன் தயாராகி வந்தது.
இதற்காக மிகப்பெரிய ஒரு படகு தயார் செய்யப்பட்டு அந்தப் படகில் உணவகம் அமைக்கப்பட்டது. இந்த படகானது 125 அடி நீளத்துடன், 25 அடி அகலம் கொண்டதாகவும் இதில் 2 அடுக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உதயம்
இதில், சமையலறை, கழிவறை போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் இந்த மிதவை படகு உணவகத்தை அமைச்சர் தாமோ அன்பரசன் திறந்து வைக்கவுள்ளார்.
ஏற்கனவே இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. மேலும், இதேபோல் மிதக்கும் உணவகம் கோவையிலும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.