கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி - காரில் ஓட்டுநர்கள் கொடூர சம்பவம்!
கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாய் தந்தை உயிரிழந்த நிலையில் அத்தை வீட்டில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமியை அவரது அத்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த சிறுமி கோபத்தில் கடந்த 8 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த சிறுமியிடம் கார் ஓட்டுநரான பாக்கிய ராஜ் என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.பாக்கியராஜின் பேச்சை கேட்டு சிறுமி நம்பியுள்ளார். பின்னர், தனது நண்பரும், மற்றொரு ஓட்டுநர் பரமசிவன் என்பவருக்கு போன் செய்து அழைத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அதன் பிறகு சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். மேலும் அந்த சிறுமிக்கு வேலை வாங்கி தராமல் காரில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சாலையில் வீசி சென்றுள்ளனர்.இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்கள் பாக்கியராஜ் ,பரமசிவன் இருவர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன் IBC Tamil
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil