வேதியலுக்கான நோபல் பரிசு; தேர்வான Google ஊழியர்கள் - இவர்கள் சாதித்தது என்ன?

Google United States of America England World
By Karthikraja Oct 09, 2024 10:16 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 2024 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

கடந்த 1901ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு(nobel Prize), உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. 

nobel prize

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

இயற்பியலுக்கான நோபல் பரிசு; அமெரிக்கா, கனடா விஞ்ஞானிகள் தேர்வு - சாதித்தது என்ன?

இயற்பியலுக்கான நோபல் பரிசு; அமெரிக்கா, கனடா விஞ்ஞானிகள் தேர்வு - சாதித்தது என்ன?

வேதியலுக்கான நோபல்

மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 2024 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பேக்கர்(David Baker), ஜான் எம். ஜம்பர்(John M. Jumper) மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ்(Demis Hassabis) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

nobel prize for chemistry

புரதங்கள் தொடர்பான ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் எம். ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் கூகிளின் deep mind பிரிவில் பணிபுரிபவர்கள்.


ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.