சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து - என்ன நிலவரம்?
சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சிப்காட் விபத்து
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடந்து வந்தது.
அப்போது ஒரு டேங்கர் திடீரென வெடித்தது. சுமார் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் அதில் இருந்ததால், டேங்கர் வெடித்ததும் ரசாயன நீர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஒரு சிலருக்கு கண் எரிச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
20 பேர் பாதிப்பு
இதனால் அருகில் உள்ள 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து குடியிருப்புக்குள் புகுந்த ரசாயன நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடலூர் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.