8-ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 6-ம் வகுப்பு மாணவன் - பரபரப்பு
8-ம் வகுப்பு மாணவனை, 6-ம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டால் விபரீதம்
கர்நாடகா, குருசித்தேஷ்வர் நகரில் வசித்து வந்த மாணவன் சேத்தன் ரக்காசகி(15). அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்ல இருந்தான்.
சம்பவத்தன்று இந்த மாணவன் எதிர்வீட்டில் வசிக்கின்ற 6-ம் வகுப்பு மாணவனுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கட்டி புரண்டுள்ளனர்.
மாணவன் கொலை
இதில் ஆத்திரமடைந்த 6-ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு ஓடிச் சென்று ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு வந்து 9-ம் வகுப்பு மாணவனை வயிற்றில் குத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளான். உடனே சேத்தனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.
இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் அந்த மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பள்ளியில் படிக்கின்ற சிறுவர்களை ஆக்சன் சினிமா , செல்போனில் ஆக்சன் கேம் வீடியோ விளையாட அனுமதிக்காதீர்கள்.
அது சிறுவர்களின் மனநிலையை வன்முறைமிக்கவர்களாக மாற்றிவிடும் என போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.