த்ரிஷாதான் சிக்கல்; சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை - விஜய் குறித்து போட்டுடைத்த பிரபலம்!
விஜய்-த்ரிஷா குறித்து பத்திரிக்கையாளர் பேசியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
விஜய்-த்ரிஷா
நடிகர் விஜய் GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவுள்ளார். அதன்பின், அரசியலில் முழுவதுமாக களமிறங்குகிறார். நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும், பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், விஜய் - திரிஷாவை இணைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பரவி வருகிறது. கடந்த மாதம் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி தானும், விஜய்யும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் த்ரிஷா.
பிரபலம் தகவல்
மேலும், அதற்கு ஒரு காதல் பாடலையும் இணைத்திருந்தார். இது பெரும் கவனத்தை ஈர்த்து இணையத்தில் பேசுபொருளானது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா, "விஜய் - திரிஷா விவகாரத்தில் திரிஷாவால்தான் சிக்கல். இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

ஆனால் திரிஷா கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். அதைத்தான் சிக்கல் என்று சொல்கிறேன். விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார்.
அவர் தரப்பை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வருவது சங்கீதாவுக்கு பிடிக்கவே இல்லை. அந்தப் பிரச்னை வேறு அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
சாதாரணதர பரீட்சை : 09 ஆம் தரத்தில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சாதித்த மாணவன் : குவியும் வாழ்த்துக்கள் IBC Tamil