எனக்கு சேனல் முக்கியமில்லை, திரும்ப கூப்பிடாதீங்க...விஜய் டிவியை குறித்து வெங்கடேஷ் பட்!
விஜய் டிவியின் மெகா ஹிட் ரியாலிட்டி ஷோ ஆன குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது 5வது சீசன் தொடங்கியுள்ளது.
விஜய் டிவி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தூணாக திகழ்ந்து வந்தது அதன் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் முன்பு இந்த நிகழ்ச்சியை தயாரித்தது வந்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனமும் வெளியேறியது.
தற்போது முதல் முறையாக செஃப் வெங்கடேஷ் பட் இது குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "கடந்த 24 ஆண்டுகளாக நான் விஜய் டிவியில் மட்டும் தான் இருந்தேன். அதற்கு முக்கியமான காரணம் மீடியா மேசன்ஸ். எனக்கு எப்போதெல்லாம் மீடியாவில் வர வாய்ப்பு கிடைத்ததோ
அப்போது எல்லாம் எனது உடன் பிறவா சகோதரிகளான ரூஃபா மற்றும் ப்ரதிமா இவரிடத்தில் தான் நான் அட்வைஸ் கேட்டு இருக்கிறேன். இன்று எனக்கு இருக்கும் இந்த புகழ் பிரபலம் அனைத்துக்கும் அவர்கள் தான் காரணம். அவர்கள் தான் என்னை நன்றாக காண்பித்து இருக்கிறார்கள், சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள்.
எனக்கு என்றுமே ஆதரவாக இருந்து இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கொடுத்த ஒரே அட்வைஸ் என்றுமே ஒரே இடத்தில் இருந்தால் தான் நீங்கள் எக்ஸ்க்ளுசிவாக தெரிவீர்கள் என்பது தான். சமையல் வித் வெங்கடேஷ் பட், கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி
வெங்கடேஷ் பட்
இப்படி அனைத்தையும் சேர்த்து இதுவரையில் கிட்டத்தட்ட 15 முதல் 20 சீசன் வரை செய்துள்ளோம். இது அனைத்தையும் தயாரித்தவர்கள் மீடியா மேசன்ஸ். அன்று முதல் இன்று வரை விஜய் டிவியில் ஏராளமான மாற்றங்கள் இருந்துள்ளன. ஆனால் மீடியா மேசன்ஸில் இதுவரையில் எந்த ஒரு மாற்றமும் இருந்ததில்லை.
அதே நபர்களுடன் தான் நான் அன்றில் இருந்து இன்று வரை பயணித்து வருகிறேன். அவர்களுடன் எனக்கு ஒரு கம்பர்ட் சோன் உள்ளது. இதுவரையில் நான் செய்த அனைத்து ஷோகளிலும் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து என்னை பேச வைத்து கிடைத்தது. எனக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதை தான் நான் செய்வேன் அதை தான் பேசுவேன்.
டாக் பேக்கில் கூட இதை பேசுங்கள் என என்றுமே சொன்னது கிடையாது. எல்லாமே தன்னிச்சையாக நான் செய்தது தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன் வெற்றிக்கும் மிக முக்கியமான காரணம் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தன்னிச்சையான செயல்பாடு மற்றும் முழு சுதந்திரம் தான்.
தற்போது மீடியா மேசன்ஸ் மற்றும் விஜய் டிவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மீடியா மேசன்ஸ் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்து தற்போது சன் டிவியில் இணைந்துள்ளார்கள். என்னை விஜய் டிவியில் இருந்து கேட்கும் போது கூட மீண்டும் என்னை விஜய் டிவிக்கு கூப்பிடாதீங்க. எனக்கு மீடியாவை விட நன்றிக்கடன் தான் முக்கியம். என்னை இதுவரையில் வளர்த்துவிட்டது மீடியா மேசன்ஸ். அவர்கள் எந்த சேனலுக்கு போகிறார்களோ நானும் அவர்களுடன் போய்விடுவேன். எனக்கு சேனல் முக்கியமில்லை” என்றார்.