மனிதம் எங்கே? தீயாய் பரவிய மீம்ஸ் - குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் வேதனை..!

Cooku with Comali
By Thahir May 30, 2022 06:08 PM GMT
Report

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று காமெடி கலந்து சமையல் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

நாள் தோறும் வித விதமான சமையல்களை செய்து கலக்கல் காமெடிகளால் மக்களை கவர்ந்துள்ளது இந்த நிகழ்ச்சி.

மனிதம் எங்கே?  தீயாய் பரவிய மீம்ஸ் -  குக் வித் கோமாளி வெங்கடேஷ் பட் வேதனை..! | Cook With Comali Venkatesh Bhatt In Pain

இதில் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் இருந்து வருகிறார்.அண்மையில் அந்நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் அவர்,குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பலபேர் தனக்கு மெசேஜ் செய்வதாக கூறினார்.

அதில் ஒரு பெண் இந்த நிகழ்ச்சி பார்த்து இந்த வருஷம் கர்ப்பம அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். எனக்கு 8 வருசமா குழந்தையில்லை அதற்காக ஐவிஎப் சிகிச்சை பெற வந்தேன்.

குக் வித் கோமாளி பார்த்தேன் கவலை எல்லாம் மறந்து கர்ப்பம் அடைந்துள்ளேன் என்று தெரிவித்தார் என்று கூறி பெருமை பட்டார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது.இதற்கு பலரும் கிண்டல் அடித்தும்,ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் தனது முகநுால் பக்கத்தில், ரெண்டு நாளா மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன்.

என்னைக் கேலி செய்ததற்காக இல்லை. மனிதம் செத்துவிட்டது என்பதற்காக! எது வேண்டுமானாலும் சாகலாம் மனிதம் சாகாது.

கடவுள் இருக்காருடா குமாரு... சந்திரமுகி படம் மாதிரி ரெண்டு நாளா அண்ணனுங்க ஆட்டம் இருந்துச்சு. நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளார்கள்.

கீழே நான் பதிவிட்டிருக்கும் இந்தப் புகைப்படம் நேஷனல் லெவலில் டிரெண்ட் ஆகியுள்ளது. நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

குழந்தைச் செல்வம் உள்ளவர்களுக்கே அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பது தெரியும். அப்படியென்றால் இல்லாதவர்களை யோசித்துப் பாருங்கள்.

மீம் கிரியேட்டர்ஸ் எனக்காக அல்ல, உயிரைச் சுமக்கும் பெண்ணுக்காகக் கேட்கிறேன். தயவுசெய்து என்னைக் கிண்டல் செய்வதாக எண்ணி உங்களைத் தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்!

எனக்கும் மணமுடித்து ஏழு ஆண்டுகள் கழித்துக் கிடைத்த செல்வம் என் குழந்தை! ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் ஆனதை நான் உணர்ந்தவன்" என உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவின் முடிவில் “மனிதம் எங்கே” என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார்.