சென்னை டெஸ்ட்: 578 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்- பலமான ஸ்கோர்
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது, இதில் தொடக்க வீரர் டோம் சிப்லே 87 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கேப்டன் ஜோ ரூட் கேப்டன் ஜோரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
100-வது டெஸ்டில் ஆடிய அவர் தனது 20-வது சதத்தை பதிவு செய்தார். 2ம் நாளான நேற்று தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் கடந்து அசத்தினார். பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் குவித்தார். ஓலி போப் 34 ரன், ஜோஸ் பட்லர் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று 600 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் களத்தில் இருந்த டாம் பெஸ் 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டானார்.
இதனால் இங்கிலாந்து அணி 578 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர், இஷாந்த் சர்மா, ஷபாஸ் நதீம் தலா இரண்டு விக்கெடை எடுத்தனர்.
இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்க இருக்கிறது.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil