கட்டுக்கடங்காத கூட்டம்; குவிந்த பக்தர்கள் - கோவிலில் பெண்களுக்கு மூச்சுத் திணறல்!
சதுரகிரி கோயில் நெரிசலில் 3 பெண்கள் மயக்கமடைந்தனர்.
சதுரகிரி கோயில்
மதுரை, சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது.
இங்கு ஆடி அமாவாசை திருவிழாவிற்காக ஆகஸ்ட் 1 முதல் 5ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
60 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசல் காரணமாக தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை கேட் மூடப்பட்டு, பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.
பெண்கள் மயக்கம்
ஆனால், பக்தர்கள் தொடர்ந்து சாப்டூர் வாழைத் தோப்பு பாதையாக மலையேறிச் சென்றதால், மலைப்பாதையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, இரட்டை லிங்கம் பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பக்தர்கள் மலை இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இதில், ராமநாதப்புரத்தைச் சேர்ந்த சகோதரிகள் மயக்கமடைந்தனர். பின் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.