நீண்டநாள் ஆசை இதுதான் - தன்னை மாற்றிக்கொண்ட சாட்ஜிபிடி ஓனர்
Ghibli art style ஐ வைரலாக்கிய சாட்ஜிபிடி நிறுவனர் பகிர்ந்துள்ள ஃபோட்டோ கவனம் பெற்றுள்ளது.
சாட்ஜிபிடி நிறுவனர்
ஏஐ தொழில்நுட்பம் உலகம் முழுவதையும் கட்டிப்போட்டுள்ளது. அதிலும் pen AI-ன் ChatGPT கலக்கி வருகிறது. இதன் அம்சமான கிப்ளி ஸ்டைல் ஆர்ட் தற்போது வைரலாகியுள்ளது.
திரைப்படங்களின் கிளாசிக் பாணியைப் போல தோற்றமளிக்கும் விளக்கப்படங்களை உருவாக்குவதை எளிதாக்கியுள்ளது.
இந்நிலையில் சாட்ஜிபிடி நிறுவனரான சாம் ஆல்ட்மேன் தன்னை கிப்ளி ஸ்டைல் ஆர்ட்டில் மாற்றி ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.
Ghibli art
அதில் அவர் இந்திய கிரிக்கெட் வீரர் உடையணிந்து மைதானத்தில் நிற்கிறார். தற்போது இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் எந்தளவு உலகம் முழுவதும் பரவியுள்ளது என்பதற்கு இது பெரிய எடுத்துக்காட்டாக இருப்பதாக கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.