இந்த பரிகாரம் செய்தால் போதும்..பித்ரு தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த கோயில் - எங்கு தெரியுமா?
பித்ரு தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த கோயில் கோயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பித்ரு தோஷம்
உத்தரப்பிரதேச மாநிலம், ஜெயபிரபா கிராமத்தில் சரோன் தாம் - பக்தி தாம் என்ற ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலின் கட்டுமானம் 1985ஆம் ஆண்டு நானாஜி தேஷ்முக்கால் மக்களின் ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டது. இங்கு சென்று வழிப்பட்டால் கோபம் கொண்ட முன்னோர்களை சாந்தப்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
இந்த கோவிலில் பித்ரு பக்ஷத்தின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் இக்கோவிலில் வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி அனைத்து பிரச்சனைகளும் தீரும் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கோவில் பூசாரி கூறுகையில், “பணம் அல்லது நேரமின்மையால் சார் தாம் செல்ல முடியாதவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம் என்பது இந்தக் கோவிலின் சிறப்பு என்று கூறியுள்ளார்.
கோயில்
இந்த கோவிலுக்கு வந்து வழிபட்ட பிறகு, உங்கள் வீட்டிற்குச் சென்று 12 பிராமணர்களுக்கு விருந்து அளித்தால் அந்த நபரின் சார் தாம் பயணம் நிறைவுற்றதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், சார் தாம் பயணம் என்பது இந்தியாவில் உள்ள நான்கு இந்து புனிதத் தலங்களின் தொகுப்பாகும்.
பித்ரு தோஷத்தை நீக்க மக்கள் இங்கு அதிகம் வருவதுண்டு. இந்த கோவிலை கட்ட ராஜஸ்தானின் இருந்து கற்களை பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள பஞ்சமுகி மகாதேவ் சிலைகள் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நானாஜி தேஷ்முக் என்பவரால் இந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் ரூ.60 லட்சம் செலவில் கட்டப்பட்ட இக்கோயில் சார் தாம் செல்ல முடியாத கிராமப்புற ஏழை மக்களுக்காக கட்டப்பட்டது என்பதே கோயிலின் முக்கிய சிறப்பாகும்.