முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.. லிஃப்டில் கூட -அப்படி பட்டியலில் 40 எம்.பி.க்கள்
ஆண் எம்பிக்களுடன் தனியாக இருக்க வேண்டாம் என பெண் எம்பி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சார்லட் நிக்கோல்ஸ்
இங்கிலாந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சி அதிக எம்பிக்களை கொண்டுள்ளது. இதில் பெண் எம்பியாக இருப்பவர் சார்லட் நிக்கோல்ஸ், இவர் அளித்த பேட்டி ஒன்றில், 'அந்த மாதிரி' நடக்க கூடியவர்களின் ரகசிய பட்டியல் உள்ளது.

அந்த நபர்களுடன் தனியாக இருக்க வேண்டாம் என நான் எச்சரிக்கப்பட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அந்த நபர்கள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியில் தவறாக நடக்க கூடியவர்கள் என எனக்கு தெரிவிக்கப்பட்டது.
பகீர் தகவல்
அவர்களிடம் தப்பி தவறி ஏதும் வாங்கி குடித்து விடாதீர்கள் என எனக்கு கூறப்பட்டது. லிப்டில் பயணிக்கும்போது கூட அந்த நபர்களுடன் ஒருபோதும் செல்ல வேண்டாம். என்னை நான் பாதுகாத்து கொள்ள, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவர்களை தவிர்க்க வேண்டும் என என்னிடம் கூறப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கடந்த எப்ரலில், வெஸ்ட்மின்ஸ்டரில் அதிகமாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் கூடுதலாக எம்பிக்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.