டயானா திருமண பத்திரிக்கையை பார்த்துள்ளீர்களா? ஆச்சர்ய தகவல்!
டயானா திருமண பத்திரிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சார்லஸ்-டயானா
இங்கிலாந்து அரசர் சார்லஸ் முன்னாள் மனைவியான வேல்ஸ் இளவரசி டயானா மிகவும் பிரபலம். அரச குடும்பத்து மருமகள் ஆன போதும் தனது நிலை மாறாமல் நடந்துக்கொண்டதால் மக்கள் மனதில் பெரிதாக இடம்பிடித்தார்.
1997ல் ஒரு கார் விபத்தில் டயானா இறந்துவிட்டார். ஆனால் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார். இவரது வாழ்வில் திருப்பு முனையாக இருந்தது அவரது திருமணம் தான்.
திருமண பத்திரிக்கை
1981ல் நடந்த அவரது திருமணத்தின் போது, அவர்களின் முகம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, வெளியிடப்பட்ட நாணயத்தின் முன் பக்கத்தில் சார்லஸ் மற்றும் டயானாவின் முகமும் பின்பக்கத்தில் இராணி எலிசபெத்தின் முகமும் பொறிக்கப்பட்டிருந்தது.
அதில், இவர்களின் திருமணம் எங்கு எப்போது நடைபெற உள்ளது மணமகன் மணமகள் பற்றிய விபரங்கள் போன்ற குறிப்புகளோடு திருமண பத்திரிக்கை போல தயார் செய்யப்பட்டு பக்கிங்காம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டது.
இன்று வரை அதிகம் தேடப்படும் நாணயமாக இருந்து வருவது எதுவென்றால், டயானா சார்லஸ் திருமண நாணயம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.