41 ஆண்டுகளுக்கு பிறகு ஏலத்துக்கு வந்த டயானா-சார்லஸ் திருமண கேக்...! - வைரலாகும் புகைப்படம்

Princess Diana King Charles III
By Nandhini Oct 20, 2022 01:22 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு இளவரசி டயானா - இளவரசர் சார்லஸ் திருமண கேக் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானா - இளவரசர் சார்லஸ் திருமண வாழ்க்கை

1981ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வேல்ஸ் இளவரசி டயானாவிற்கும், இளவரசர் சார்ல்சிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வில்லியம், ஹாரி பிள்ளைகள் பிறந்தனர்.

இதனையடுத்து, டயானாவிற்கும், பிரின்ஸ் சார்லஸிற்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு இவர்கள், 19992ம் ஆண்டு பிரியலாம் என முடிவு செய்தனர். அதன் பின் அதிகாரப்பூர்வமாக 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்தனர்.

diana-princess

இளவரசி டயானா மரணம்

1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பாரீஸில் டயானா மற்றும் டூடி ஃபாயித் ஒரு காரில் சென்றுக்கொண்டிருந்த போது, கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டூடி ஃபாயித் மற்றும் காரின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

டயானா தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் டயானாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். டயானா 36-வது வயதில் மரணமடைந்ததது உலக மக்களை வேதனை அடையச் செய்தது.

diana-princess-king-charles-iii

ஏலத்திற்கு வந்த திருமண கேக் -

இந்நிலையில், இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் - டயானாவின் திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக் துண்டு, 41 வருடங்களுக்கு பிறகு தற்போது ஏலத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சார்லஸ் - டயானாவின் திருமணத்தின் போது, வெட்டப்பட்ட கேக்கை  41 ஆண்டுகளாக அரசு குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். 

இந்த கேக்கை தற்போது ஏலம் விட அரச குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து, இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூபாய் 27,000 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த கேக் லட்சக்கணக்கில் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

diana-princess-king-charles-iii