சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் - சிவ சிவா கோஷத்துடன் தொடக்கம்!

Tamil nadu Festival
By Sumathi Jan 05, 2023 04:21 AM GMT
Report

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் திருவிழா தொடங்கியது.

தேரோட்டம்

கடலூரில் உலக புகழ் பெற்றது சிதம்பரம் நடராஜர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவை. இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் - சிவ சிவா கோஷத்துடன் தொடக்கம்! | Chariot Festival At Chidambaram Nataraja Temple

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோலாகலம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளின் தேர்கள் வீதிகளில் வலம் வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவ சிவா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.